புறநானூறு - பாடல் (49) நாடன் என்கோ? ஊரன் என்கோ?
==============================================
பாடியவர்:
பொய்கையார்.
==============================================
பாடப்பட்டோன்:
சேரமான் கோக்கோதை மார்பன்.
==============================================
திணை:
பாடாண்.
துறை:
புலவராற்றுப்படை, இயன் மொழி
==============================================
புறநானூறு -பாடல்
(49) நாடன் என்கோ, ஊரன் என்கோ?
==============================================
நாடன் என் கோ? ஊரன் என் கோ?
பாடு இமிழ் பனிக் கடற்
சேர்ப்பன் என் கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது.
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு
எழுமே!
===============================================
சொற்பொருள்:
===============================================
நாடன் என்கோ = குறிஞ்சி
நிலத் தலைவன் என்பதால் ‘நாடன்’ என்று அழைப்பதா ?; ஊரன் எங்கோ = மருத நிலத் தலைவன் என்பதால்
‘ஊரன்” என்று அழைப்பதா ?; பாடு இமிழ் = எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கிற ; பனிக்
கடல் ‘சேர்ப்பன்’ என்கோ = குளிர்ந்த கடலையும் கடற்கரையையும் உடைய நெய்தல் நிலத் தலைவன்
என்பதால் ‘சேர்ப்பன்’ என்று அழைப்பதா? யாங்கனம் மொழிகோ = சேரமான்
கோக்கோதை மார்பனை நான் எவ்வாறு அழைப்பேன் ? ஓங்கு வாள் கோதையை = ஓங்கிய வாளைக் கைகளில்
ஏந்தியபடி இருக்கும்;
புனவர் = குறிஞ்சி
நிலத்தில் வாழும் மக்கள் ; தட்டை புடைப்பின் = தினைப் புனத்தில் கதிர் கொய்ய வரும்
பறவைகளை விரட்ட ‘தட்டை’ என்னும் கருவியை ஒலிப்பதால் ; அயலது = சற்றுத் தொலைவில்; இறங்கு கதிர் = வளைந்த
நெற் கதிர்களை உடைய; அலமரு கழனியும் = வருந்தும் மருத நிலக் கழனிகளிலும்; பிறங்கு நீர்ச்
சேர்ப்பினும் = கடல் அலைகள் ஆரவாரித்து ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும் நெய்தல் நிலத்திலும்
; புள் = வாழும் பறவைகள் ; ஒருங்கு எழுமே = அச்சத்தால் எழுந்து பட படவென்று சிறகடித்துப்
பறந்து செல்லும் !
===============================================
பொருளுரை:
===============================================
===============================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 13]
(30-09-2026)