புறநானூறு (186) நெல்லும்
உயிர் அன்றே ! நீரும் உயிர் அன்றே !
==============================================
பாடியவர்: மோசி கீரனார்.
==============================================
பாடப்பட்டோர்: எவருமிலர் !
==============================================
திணை: பொதுவியல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி
==============================================
நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், ‘யான் உயிர்’ என்பது அறிகை,
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே!
==============================================
சொற்பொருள்:
==============================================
நெல்லும்
உயிர் அன்றே = நெல்லும் உயிர் அன்று; நீரும் உயிர் அன்றே = நீரும் உயிர் அன்று;
மன்னன் உயிர்த்தே = மக்களைப்
பாதுகாக்கும் மன்னன் தான் ; உயிர் போன்றவன்; மலர்தலை உலகம் =
இந்த அகன்ற உலகத்தில் ; அதனால் = அதனால்; வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே
= கைகளில் வேலுடன் பெரிய படையை வைத்திருக்கும் நாட்டின் மன்னன்தான்; யான் உயிர் என்பது = ; மக்களின் உயிர் தானே என்பதை;
அறிகை = உணர வேண்டும் !
==============================================
பொருளுரை
==============================================
நெல்லும் உயிர் அன்று;
நீரும் உயிர் அன்று;
மக்களைப் பாதுகாக்கும் மன்னன் தான் இவ்வுலகத்திற்கு உயிர் போன்றவன்; அதனால், இந்த அகன்ற உலகத்தில், கைகளில்
வேலுடன் பெரிய படையை வைத்திருக்கும் நாட்டின் மன்னன்தான், மக்களின் உயிர் என்பதை, உணர
வேண்டும் !
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
“புறநானூறு” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு; 2057, கன்னி (புரட்டாசி) 12]
(29-09-2026)
================================================
![]() |
| நெல்லும் உயிர் அன்றே ! |